| ADDED : ஆக 23, 2024 01:48 AM
அம்மான்: உலக ஜூனியர் (17 வயது) மல்யுத்தத்தில் இந்தியாவின் ஆதித்தி, நேஹா, புல்கிட், மான்சி, சாம்பியன் பட்டம் வென்றனர்.ஜோர்டானில், உலக ஜூனியர் (17 வயது) மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஆதித்தி குமாரி, கிரீசின் மரியா லுாயிசா ஜிகிகா மோதினர். அபாரமாக ஆடிய ஆதித்தி 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான 57 கிலோ பைனலில் இந்தியாவின் நேஹா, ஜப்பானின் சோ சுட்சுயியை வீழ்த்தி தங்கம் வென்றார். பெண்களுக்கான 65 கிலோ பைனலில் இந்தியாவின் புல்கிட் 6-3 என, டாரியா புரோலோவாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 73 கிலோ பிரிவில் இந்தியாவின் மான்சி 5-0 என ஜோர்டானின் ஹன்னா பிர்ஸ்கயாவை தோற்கடித்து சாம்பியன் ஆனார்.'கிரிகோ-ரோமன்' எடைப்பிரிவில் இந்தியாவின் ரோனக் தாஹியா (110 கிலோ), சைனத் பார்த்தி (51 கிலோ) வெண்கலம் வென்றனர்.