உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வெண்கல நாயகன் ஜாதவ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

வெண்கல நாயகன் ஜாதவ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

சுதந்திர இந்தியாவுக்கு ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் முதல் பதக்கம் பெற்று தந்தவர் ஜாதவ். மல்யுத்தத்தில் வெண்கலம் வென்று சாதித்தார். மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஜாதவ். 1948ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்றார். இவருக்கு இந்தியா, சர்வதேச அளவிலான மல்யுத்த விதிகள் இடையே உள்ள வேறுபாடு குறித்து அவ்வளவாக தெரியவில்லை. இதனால் 6வது இடமே பெற முடிந்தது. பின் 1952ல் ஹெல்சின்கியில் நடந்த ஒலிம்பிக்கில் மீண்டும் களமிறங்கினார். 'பிரீஸ்டைல்' 57 கிலோ எடைப் பிரிவின் 5 சுற்றுகளில் தன்னை எதிர்த்தவர்களை வெறும் 5 நிமிடத்தில் வீழ்த்தினார். 6வது சுற்றில் இவருக்கு சோதனை ஏற்பட்டது. இம்முறை ஜப்பானின் வலிமைமிக்க சோபாச்சி இஷியை சந்திக்க நேர்ந்தது. சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மோதலின் முடிவில் சோபாச்சி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றும் ஜாதவுக்கு சோதனையாகத்தான் இருந்தது. இதில் சோவியத் யூனியனின் ரஷித் மமிடோகோவை எதிர்கொண்டார். ஜாதவ் மிகுந்த துணிச்சலுடன் போராடிய போதும் ரஷித்தை சமாளிக்க முடியவில்லை. இதனால் வெண்கலத்துடன் ஆறுதல் தேடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை