உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: வைஷாலி டிரா

செஸ்: வைஷாலி டிரா

டிபிளிசி: கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரின் நான்காவது சுற்று போட்டியை வைஷாலி 'டிரா' செய்தார்.ஜார்ஜியாவில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் வைஷாலி உட்பட மொத்தம் 10 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்ற வைஷாலி, நான்காவது சுற்றில் ஜார்ஜியாவின் லேலா ஜாவாகிஸ்விலியை சந்தித்தார். இப்போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார் வைஷாலி. துவக்கத்தில் இருந்தே இருவரும் சமபலத்தை வெளிப்படுத்தினர். 44வது நகர்த்தலில் வைஷாலி தவறு செய்ய போதும், லேலாவும் மோசமாக செயல்பட்டார். இதையடுத்து 46 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இதுவரை நடந்த 4 சுற்று முடிவில் 2 புள்ளியுடன் (1 வெள்ளி, 2 'டிரா', 1 தோல்வி), வைஷாலி 9வது இடத்தில் உள்ளார். கஜகஸ்தானின் பிபிசாரா (3.0), உக்ரைனின் அனா முசிசக் (2.5), கிரீசின் ஸ்டாவ்ரவுலா (2.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி