பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'வால்ட்'
பிரிவு பைனலில் அசத்திய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ், 15.300 புள்ளிகளுடன்
முதலிடம் பிடித்தார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' தங்கத்தை
தட்டிச் சென்றார். ஏற்கனவே 'ஆல்-அரவுண்டு' அணிகள், தனிநபர் பிரிவில்
தங்கம் வென்றிருந்தார். தவிர இது, ஒலிம்பிக் அரங்கில் இவரது 7வது தங்கம்
ஆனது. இதுவரை 7 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கம்
வென்றுள்ளார்.பிலிப்பைன்சுக்கு 2வது தங்கம்ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'புளோர்' பிரிவு தகுதிச் சுற்றில் பிலிப்பைன்சின் கார்லஸ் யூலோ, 14.766 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்த நடந்த பைனலில் அசத்திய இவர், 15.000 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம் வென்ற இரண்டாவது பிலிப்பைன்ஸ் நட்சத்திரமானார். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த பளுதுாக்குதலில் (55 கிலோ) பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஹிடிலின் டயாஸ் தங்கம் வென்றிருந்தார்.'போல் வால்ட்': பைனலில் டுப்ளான்டிஸ்ஆண்களுக்கான 'போல் வால்ட்' தகுதிச் சுற்றில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 24, பங்கேற்றார். இரண்டு முறை உலக சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், அதிகபட்சமாக 5.75 மீ., தாண்டி முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். போல் வால்ட் போட்டியில் உலக சாதனை படைத்த இவர், பைனலில் (ஆக. 5) அசத்தினால் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.டோக்கியோவில் வெள்ளி வென்ற அமெரிக்காவின் கிறிஸ்டோபர் நில்சன், 5.40 மீ., மட்டுமே தாண்டியதால் 26வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.கால்பந்து: அமெரிக்கா அபாரம்பெண்களுக்கான கால்பந்து அரையிறுதியில் அமெரிக்கா, ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. பின் இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 107 வது நிமிடத்தில் அமெரிக்காவின் டிரினிட்டி ராட்மேன் ஒரு கோல் அடித்தார். முடிவில் அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.ஜோகோவிச்-அல்காரஸ் மோதல்டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-2 என இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி, முதன்முறையாக ஒலிம்பிக்கில் பைனலுக்குள் நுழைந்தார். இன்று நடக்கும் பைனலில் ஜோகோவிச் 37, ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 21, மோதுகின்றனர். சமீபத்தில் லண்டனில் நடந்த விம்பிள்டன் பைனலில் அல்காரஸ், ஜோகோவிச்சை வீழ்த்தி தனது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், முழங்கால் காயத்தால் அவதிப்படுவது பின்னடைவு. ஏ.டி.பி., அரங்கில் 6 முறை மோதிய போட்டியில், இருவரும் தலா 3ல் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச், அல்காரசை வீழ்த்தி இருந்தார்.கால்பந்து: அர்ஜென்டினா அதிர்ச்சிஆண்களுக்கான கால்பந்து காலிறுதியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய அர்ஜென்டினா அணி 0-1 என தோல்வியடைந்து வெளியேறியது. பிரான்சின் ஜீன்-பிலிப் மாடெட்டா (5வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். அரையிறுதியில் (ஆக. 5) பிரான்ஸ்-எகிப்து, ஸ்பெயின்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.