மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
ராஞ்சி: பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் போட்டியில் ஹரியானா அணி 4-3 என பெங்கால் அணியை வீழ்த்தியது.ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஹரியானா, பெங்கால் அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.ஹரியானா அணிக்கு கேப்டன் நீலம் (20வது நிமிடம்), நந்தினி (41வது), ஷாஷி காசா (43வது), பிங்கி (46வது) கைகொடுத்தனர். பெங்கால் அணிக்கு சில்பியா நாக் (2வது நிமிடம்), செலஸ்டினா ஹோரோ (19வது), சாந்தி ஹோரோ (51வது) ஆறுதல் தந்தனர்.முதல் போட்டியில் ஒடிசா அணியிடம் தோல்வியடைந்த ஹரியானா, அடுத்த இரு போட்டிகளில் மணிப்பூர், மிசோரம் அணிகளை வென்றது. தற்போது பெங்கால் அணியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.மற்றொரு லீக் போட்டியில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இதில் மகாராஷ்டிரா அணி 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. முதல் மூன்று போட்டியில் மணிப்பூர், மிசோரம், பெங்கால் அணிகளை வீழ்த்திய மகாராஷ்டிரா அணி முதல் தோல்வியை பெற்றது.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025