மேலும் செய்திகள்
வெள்ளி வென்றார் ரோகித்
23 hour(s) ago
உலக தடகளம்: இந்தியா ஏமாற்றம்
23 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
01-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
30-Sep-2025
உலக விளையாட்டு செய்திகள்
29-Sep-2025
புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை விட, உடன் செல்லும் நிர்வாகிகளுக்கு ஐந்து மடங்கு அதிக பணம் வழங்கப்பட உள்ளது.பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள், உடன் செல்லும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் பணம் குறித்த விபரம் வெளியானது. இதன் படி, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ரூ. 2 லட்சம் தரப்படுகிறது. பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் கிடைக்கும்.போட்டி நாட்களில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் வீரர், வீராங்கனைகள் செலவுகளுக்கு தினப்படியாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக் போல, ரூ. 4,171 மட்டும் பெறுவர். இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம் வீரர், வீராங்கனைகளுடன் செல்லும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஒலிம்பிக் கிராமத்தில் 5 நாள் தங்குவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 90,000 வழங்கப்படும். இத்துடன் நாள் ஒன்றுக்கு தினப்படியா ரூ. 25,026 தரப்பட உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக்கில் (ரூ. 12,513), தரப்பட்டதை விட இரு மடங்கு அதிகம்.
23 hour(s) ago
23 hour(s) ago
01-Oct-2025
30-Sep-2025
29-Sep-2025