உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பிரவீன் சித்ரவேல் ஏமாற்றம்

பிரவீன் சித்ரவேல் ஏமாற்றம்

கிளாஸ்கோ: உலக உள்ளரங்கு தடகளத்தின் 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 11வது இடம் பிடித்தார்.ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 22, உட்பட 14 பேர் பங்கேற்றனர். முதலிரண்டு வாய்ப்பில் 15.76, 16.29 மீ., தாண்டிய இவர், மூன்றாவது வாய்ப்பில் 16.45 மீ., தாண்டினார். முதல் மூன்று வாயப்பின் முடிவில் 11வது இடம் பிடித்து ஏமாற்றினார்.ஆசிய விளையாட்டில் (2022) வெண்கலம் வென்ற தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், கடந்த ஆண்டு நடந்த ஆசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். அதிகபட்சமாக 17.37 மீ., தாண்டியது இவரது சிறந்த செயல்பாடாக உள்ளது.மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பர்கினா பசோவின் ஹியூஸ் பேப்ரிஸ் ஜாங்கோ (17.53 மீ.,) முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அடுத்த இரு இடங்களை முறையே அல்ஜீரியாவின் யாசர் டிரிக்கி (17.35 மீ.,), போர்ச்சுகலின் டியாகோ பெரெய்ரா (17.08 மீ.,) கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை