உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கபடி: புனே வெற்றி

கபடி: புனே வெற்றி

பாட்னா: புரோ கபடி லீக் போட்டியில் புனே அணி 60-29 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது.இந்தியாவில் புரோ கபடி தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நேற்று பாட்னாவில் நடந்த லீக் போட்டியில் புனேரி பல்தான்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டி துவங்கிய 8 வது நிமிடத்தில் தெலுங்கு அணி ஆல் அவுட்டானது. அடுத்த 7 நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாக, முதல் பாதியில் புனே அணி 29-6 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் புனே அணி புள்ளிகளை குவித்தது. முடிவில் புனே அணி 60-29 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. புனே சார்பில் ஆகாஷ் ஷிண்டே 11, மோகித் 8 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை