UPDATED : அக் 26, 2026 12:00 AM | ADDED : அக் 25, 2026 08:12 PM
கோப்பை வென்றார் ரிபாகினா நிங்போ: சீனாவில், டபிள்யு.டி.ஏ., நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் மோதினர். ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2வது முறையாக (2025, 2026) கோப்பை வென்றார். செல்சி அணி ஏமாற்றம் லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கிளப் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் செல்சி, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய செல்சி அணி 0–2 என, தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1–2 என, ஆஸ்டன் வில்லா அணியிடம் வீழ்ந்தது. ஆர்சனல் அணி 2–0 என, எவர்டன் அணியை வென்றது. புல்ஹாம் அணி 1–0 என, கோவன்ட்ரி சிட்டி அணியை தோற்கடித்தது. வில்லாரியல் அணி வெற்றி மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் வாலன்சியா, வில்லாரியல் அணிகள் மோதின. இதில் வில்லாரியல் அணி 2–1 என வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 1–0 என்ற கோல் கணக்கில் டெபோர்டிவோ அணியை வென்றது.