உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஷர்வானிகா தங்கம் * உலக கேடட் செஸ் தொடரில்

ஷர்வானிகா தங்கம் * உலக கேடட் செஸ் தொடரில்

துர்ரெஸ்: உலக 'கேடட்' செஸ் தொடரில் தங்கம், வெள்ளி வென்றார் ஷர்வானிகா.சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக 'கேடட் ரேபிட், பிளிட்ஸ்' தொடர் அல்பேனியாவில் நடந்தது. 43 நாடுகளில் இருந்து மொத்தம் 711 பேர் பங்கேற்றனர்.இதன் 10 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ரேபிட் பிரிவில் இந்தியாவின் ஷர்வானிகா பங்கேற்றார். இதில் 8.5/11.0 புள்ளி எடுத்து முதலிடம் பெற்ற இவர், தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். 'பிளிட்ஸ்' பிரிவில் பங்கேற்ற ஷர்வானிகா, 9.0/11.0 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளி கிடைத்தது.8 வயதுக்குட்பட்டோருக்கான ஓபன் 'ரேபிட்' பிரிவில் இந்திய வீரர் திவித் ரெட்டி அதுல்லா, மொத்தம் 10.0 புள்ளி எடுத்து முதலிடம் பெற, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். பிளிட்ஸ் பிரிவில் 8.5/11 புள்ளி எடுத்த திவித் ரெட்டி, மூன்றாவது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை