உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சூப்பர் ஸ்பிட்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

சூப்பர் ஸ்பிட்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

ஜெர்மனியின் முனிக் நகரில் 20வது ஒலிம்பிக் போட்டி (1972, ஆக. 26 - செப். 11) நடந்தது. முதல் 10 நாட்கள் போட்டிகள் சுமுகமாக நடந்தன. 11வது நாள் அதிகாலை (செப்.5) பாலஸ்தீன பயங்கரவாதிகள் ஒலிம்பிக் கிராமத்தில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தி 2 இஸ்ரேல் வீரர்களை கொன்று, 9 வீரர்களை பிணையக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இஸ்ரேல் சிறையில் உள்ள 234 பேரை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். மீட்பு போராட்டத்தில் 5 பயங்கரவாதிகள், ஒரு போலீஸ், மற்றும் 9 வீரர்கள் கொல்லப்பட்டனர். இறுதி சடங்கிற்காக நிறுத்தப்பட்ட போட்டிகள் 36 மணி நேரத்திற்கு பின் மீண்டும் நடத்தப்பட்டன.அமெரிக்க நீச்சல் வீரரான மார்க் ஸ்பிட்ஸ் ஏழு தங்கப்பதக்கங்கள் வென்றார். 200 மீ., 'பிரீஸ்டைல்' நீச்சலில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற இவர், அன்று மாலையே 4x100 மீ., 'பிரீஸ்டைல்', பிரிவில் மீண்டும் சாதனை படைத்தார். தொடர்ந்து அசத்திய ஸ்பிட்ஸ், 100 மீ., 'பிரீஸ்டைல்', 200 மீ., 'பட்டர்பிளை', 100 மீ., 'பட்டர்பிளை', 4x200 மீ., 'பிரீஸ்டைல்', 4x100 மீ., 'மெட்லே' பிரிவுகளில் தங்கம் வென்று ஏழு சாதனைகளை தகர்த்து எறிந்தார். இவரது சாதனையை சக நாட்டு நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (2008 பீஜிங் ஒலிம்பிக்) 8 தங்கம் வென்று முறியடித்தார்.ஆண்களுக்கான ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. தங்கம், வெள்ளிப் பதக்கத்தை ஜெர்மனி, பாகிஸ்தான் கைப்பற்றின. பதக்கப்பட்டியலில் ரஷ்யா (50 தங்கம்) முதலிடமும், மேற்கு ஜெர்மனி (13 தங்கம்) 4வது இடமும் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை