உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

புசன்: உலக டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 3-2 என ஹங்கேரியை வீழ்த்தியது.தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.'குரூப்-1' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா, அய்ஹிகா முகர்ஜி வெற்றி பெற்றனர். ஸ்ரீஜா அகுலா தோல்வியடைந்தார்.இந்திய அணி இன்று உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.'குரூப்-3' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய ஆண்கள் அணி முதல் போட்டியில் சிலியை வென்றது. இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, போலந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார். அஜந்தா சரத் கமல், மானவ் தாக்கர் தோல்வியை தழுவினர். இன்று இந்திய அணி தென் கொரியாவை சந்திக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை