உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பளுதுாக்குதல்: பிந்தியாராணி வெண்கலம்

பளுதுாக்குதல்: பிந்தியாராணி வெண்கலம்

புகெட்: உலக கோப்பை பளுதுாக்குதலில் இந்தியாவின் பிந்தியாராணி வெண்கலம் வென்றார்.தாய்லாந்தில் உலக கோப்பை பளுதுாக்குதல் நடக்கிறது. பெண்களுக்கான 55 கிலோ பிரிவில் இந்தியாவின் பிந்தியாராணி தேவி 25, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 83, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 113 என மொத்தம் 196 கிலோ பளுதுாக்கிய இவர், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். தவிர 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து இவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இதன்மூலம் உலக கோப்பை பளுதுாக்குதல் 55 கிலோ எடைப்பிரில் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.மணிப்பூரை சேர்ந்த பிந்தியாராணி தேவி, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கம் (2019ல் தங்கம், 2021ல் வெள்ளி) வென்றார். தொடர்ந்து அசத்திய இவர், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் (2022) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஒலிம்பிக் வாய்ப்பு

பிந்தியாராணி பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். இவரது 55 கிலோ பிரிவு பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை. இதனால் 2022ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ பிரிவில் பங்கேற்ற இவர் 25வது இடம் பிடித்து ஏமாற்றினார். தற்போது 59 கிலோ எடைப்பிரிவுக்கான ஒலிம்பிக் தகுதி தரவரிசையில் 29வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் 'டாப்-10' இடம் பிடிப்பவர்கள் மட்டுமே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை