உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக் ஜோதிஒலிம்பியா: இத்தாலியில், அடுத்த ஆண்டு (பிப். 6-22) குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக நேற்று, ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் விழா நடந்தது. இந்த ஜோதி, துவக்க விழா நடக்கவுள்ள இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சான் சிரோ மைதானத்திற்கு வரும் பிப். 6ல் வந்தடையும்.பார்சிலோனா அதிர்ச்சிலண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் பார்சிலோனா (ஸ்பெயின்), செல்சி (இங்கிலாந்து) அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய பார்சிலோனா 0-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணி 0-2 என, பேயர் லெவர்குசன் அணியிடம் (ஜெர்மனி) வீழ்ந்தது.போர்ச்சுகல் முன்னேற்றம்பாசிக்: பிலிப்பைன்சில், பெண்களுக்கான 'புட்சால்' உலக கோப்பை கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. முதல் போட்டியில் தான்சானியாவை வென்ற போர்ச்சுகல் அணி, 6 புள்ளிகளுடன் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.எக்ஸ்டிராஸ்* ராஜஸ்தானில், 'கேலோ இந்தியா' பல்கலை., விளையாட்டு நடக்கிறது. துப்பாக்கி சுடுதல் 'டிராப்' பிரிவில் குரு நானக் தேவ் பல்கலை.,யை சேர்ந்த நீரு தண்டா (பெண்கள்), ஆதித்யா பரத்வாஜ் (ஆண்கள்) தங்கம் கைப்பற்றினர்.* மும்பையில் நடக்கும் சுனில் வர்மா நினைவு ஸ்குவாஷ் தொடருக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ஆராதனா கஸ்துாரிராஜ் 3-0 (11-6, 11-9, 11-7) என சகவீராங்கனை ஷுவ்ரா போராவை வீழ்த்தினார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ராகுல் பைதா 3-0 (11-7, 11-5, 11-8) என, திவித் பூஜாரியை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி