உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி * ஹங்கேரி மல்யுத்த தொடரில்...

இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி * ஹங்கேரி மல்யுத்த தொடரில்...

புடாபெஸ்ட்: ஹங்கேரி மல்யுத்த தொடரில் அன்டிம், அன்ஷு வெள்ளி வென்றனர்.ஹங்கேரியில் சர்வதேச மல்யுத்த தொடர் நடந்தது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்தியாவின் அன்டிம் பங்கல், 53 கிலோ பிரிவு பைனலுக்கு முன்னேறினார். இதில் சுவீடனின் எம்மா டெனிசிடம் 0-4 என தோற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.59 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அன்ஷு மாலிக், சீனாவின் கெக்சின் ஹாங் மோதினர். இதில் அன்ஷு 1-12 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இத்தொடரில் இந்தியா 1 தங்கம் (அமன்), 2 வெள்ளி என 3 பதக்கம் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை