உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மல்யுத்த வீராங்கனைகளுக்கு வெற்றி : சாக் ஷி, பஜ்ரங் வரவேற்பு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு வெற்றி : சாக் ஷி, பஜ்ரங் வரவேற்பு

புதுடில்லி: ''பிரிஜ்பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது, மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி,'' என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங் மீது 6 வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர். இவரை கைது செய்ய வேண்டும் என பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக் ஷி மாலிக் உள்ளிட்டோர் போராடினர். இவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். நேற்று டில்லி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிரியங்கா வெளியிட்ட உத்தரவில்,'பிரிஜ்பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளது. இவர் மீது குற்றச்சாட்டுகளை பதிய வேண்டும். வீராங்கனைகள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஜ்ரங் புனியா கூறுகையில்,'' மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. கோர்ட் தீர்ப்பு ஆறுதலாக அமைந்துள்ளது. வீராங்கனைகளை கேலி செய்தவர்கள் தற்போது வெட்கப்பட வேண்டும்,'' என்றார். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக் ஷி மாலிக் கூறுகையில்,'' வெயில், மழை என பாராமல், தெருக்களில் பல இரவுகள் படுத்து உறங்கினோம். நீதிக்கான எங்களது போராட்டத்தில் சில அடிகள் முன்னேறியுள்ளோம். கோர்ட்டுக்கு நன்றி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி