உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / போராடி வீழ்ந்தார் அன்கிதா

போராடி வீழ்ந்தார் அன்கிதா

மாட்ரிட்: ஸ்பெயினில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா ('நம்பர்-300', ரஷ்யாவின் அலினா சரயேவாவை ('நம்பர்-275') எதிர்கொண்டார்.முதல் செட்டை அன்கிதா 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 4-6 என நழுவவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் துவக்கத்தில் அன்கிதா 3-2 என முந்தினார். பின் மோசமாக செயல்பட்ட அன்கிதா 3-6 என செட்டை நழுவவிட்டார். இரண்டு மணி நேரம், 56 நிமிட போராட்டத்துக்குப் பின், அன்கிதா 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்விடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை