உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிதி ஒதுக்கி 9 மாதங்களுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்

நிதி ஒதுக்கி 9 மாதங்களுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்

றைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி நான்காவது வார்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள காந்தி சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையம், மருத்துவமனை, கடைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலை சிதிலமடைந்து காணப்பட்டது. எனவே, இங்கு சிமென்ட் சாலையாக மேம்படுத்த வேண்டும் என, இப்பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட கவுன்சிலர் நிதியில், 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து, 9 மாதங்கள் கடந்த நிலையில், புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை.இது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள், நேற்று காலை துவங்கப்பட்டு வேகமாக நடந்து வருகின்றன.இந்த பணிகளை, செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி ஆய்வு செய்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை