மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
9 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
9 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
9 hour(s) ago
கூடுவாஞ்சேரி: சென்னை, கோயம்பேட்டில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு, சிவகாசியை நோக்கி லாரி ஒன்று சென்றது.அப்போது, கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற போது, திடீரென பழுதாகி, சாலையின் மையத்திலேயே நின்றது.அதனால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து வந்தனர்.அதன்பின், பிற வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதைத் தொடர்ந்து, பழுதாகி நின்ற லாரியை பழுது நீக்கி அனுப்பி வைத்தனர்.இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago