| ADDED : ஆக 19, 2024 12:18 AM
பாண்டி பஜார் : 'பைக்'கில் சென்ற தலைமை காவலரை இடித்து விட்டு, நிறுத்தாமல் சென்ற லோடு வேன் ஓட்டுனர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தேனாம்பேட்டை, அண்ணா சாலை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார், 45; தலைமை காவலர். இவர், கிண்டி காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளரின் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை தன் 'பைக்'கில், தி.நகர் கண்ணம்மாபேட்டை 70 அடி சாலையில் இருந்து, ஹாஸ்பிடல் சாலைக்கு திரும்பினார். அப்போது, கண்ணம்மாபேட்டை நோக்கி வந்த 'டாடா ஏஸ்' லோடு வேன், விஜயகுமார் பைக் மீது இடித்து விட்டு, வேகமாக சென்றது.இதில், இடுப்பில் உள்காயமடைந்த விஜயகுமார், தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், கிண்டி கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின்படி லோடு வேன் ஓட்டுனரை, பாண்டிபஜார் போலீசார் தேடி வருகின்றனர்.