உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுநாகலுாருக்கு ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை

சிறுநாகலுாருக்கு ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு சிறுநாகலுார் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.தற்காலிகமாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில், அரிசி, பருப்பு கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இதனால், போதுமான இடவசதி இன்றி உள்ளது.எனவே, சிறுநாகலுார் பகுதிக்கு என, புதிதாக நியாய விலை கடை அமைத்து தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி