உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகர் நகராட்சி ஆபீஸ் எதிரில் காட்சிப்பொருளாக உள்ள சிக்னல் கம்பம்

மறைமலை நகர் நகராட்சி ஆபீஸ் எதிரில் காட்சிப்பொருளாக உள்ள சிக்னல் கம்பம்

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சந்திப்பு உள்ளது.மறைமலை நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்திப்பு வழியாக, மறைமலை நகர் வந்து செல்கின்றனர்.இந்த பகுதியில் சிக்னல் இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, மறைமலை நகர் பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், இந்த பகுதியில் தனியார் பல்கலைக்கழக நிதி உதவியுடன், போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன.சிக்னல்கள் அமைக்கப்பட்டு பல மாதங்களை கடந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.எனவே, இந்த சிக்னல்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.மறைமலை நகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கூறியதாவது:மறைமலை நகர் ஜி.எஸ்.டி., சாலையில், சாமியார் கேட் சந்திப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் எதிரில் என, இரண்டு போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் உள்ளன.இதனால், அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இந்த சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை