உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாற்காலி, குடிநீர் வசதி ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

நாற்காலி, குடிநீர் வசதி ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலின்போது, ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் வரையிலான எல்லைக்கோடு வரை, குடிநீர் மற்றும் நாற்காலி வசதி உள்ளிட்டவற்றை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.இதுபோன்ற செலவினங்கள் மேற்கொள்ள, கடந்த முறை தேர்தல் கமிஷன் வாயிலாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 1,300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. இம்முறை லோக்சபா தேர்தலில் ஓட்டுச்சாவடி செலவுக்கான நிதி வழங்கும் அரசாணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, நான்கு சட்ட சபை தொகுதியிலும் உள்ள, 1,398 ஓட்டுச்சாவடிகளுக்கு, 18.17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை