உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரும்பேர்கண்டிகை டாஸ்மாக் பூட்டை உடைத்து திருட முயற்சி

பெரும்பேர்கண்டிகை டாஸ்மாக் பூட்டை உடைத்து திருட முயற்சி

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை பகுதியில், அரசு மதுபான கடை எண்: 4028 இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு, மதுபான கடை ஊழியர்கள், விற்பனை முடித்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், மின்சாரத்தை துண்டித்து, கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு, பூட்டப்பட்டு இருந்த கடையின் ஷட்டரை கடப்பாறையால் உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர்.பின், டாஸ்மாக் கடையிலிருந்த பணம் வைக்கும் இரும்பு லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால், விலை உயர்ந்த மது பாட்டில்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.அப்போது, இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் வருவதை அறிந்த மர்ம நபர்கள், மது பாட்டில்களை அப்படியே விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்ப நாய் வரவழைத்து, அப்பகுதியில் சோதனை செய்தனர். செங்கல்பட்டில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.கொள்ளை முயற்சி குறித்து, அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை