உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓட்டளிப்பதன் அவசியம் கோலம் வரைந்து விழிப்புணர்வு

ஓட்டளிப்பதன் அவசியம் கோலம் வரைந்து விழிப்புணர்வு

திருப்போரூர்:திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், ஓட்டளிப் பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கோலம் பார்வையாளர்களை கவர்ந்தன.லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் பொருட்டு, திருப்போரூர் பி.டி.ஓ.,அலுவலக நுழைவாயிலில், மகளிர் திட்டம் சார்பில் கோலம் வரையப்பட்டது.இதில், எமது ஓட்டு எமது உரிமை; எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல; 100 சதவீதம் ஓட்டளிப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய கோலம் வரைந் திருந்தனர்.பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தவர்கள், விழிப்புணர்வு கோலத்தைபார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை