உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அறநிலையத்துறை ஆய்வாளருக்கு அலுவலகம் கட்டும் பணி வேகம்

அறநிலையத்துறை ஆய்வாளருக்கு அலுவலகம் கட்டும் பணி வேகம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான, 2 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது.தற்போது, இந்த காலி இடத்தில் வார சந்தை நடைபெற்று வருகிறது.இதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 100க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.இக்கோவில்களின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை பாதுகாக்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் ஆய்வாளருக்கு என, 12 லட்சம் ரூபாயில், புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.கட்டட பணிகள் அனைத்தும், சில தினங்களில் முடிக்கப்பெற்று, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்