| ADDED : ஜூலை 09, 2024 06:10 AM
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கும் குப்பையை, ஊராட்சி துாய்மை பணியாளர்கள் சேகரித்து, டிராக்டர்வாயிலாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.இப்பகுதியில், சில நாட்களாக, மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. எனவே, ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும், அப்பகுதிவாசிகள் குப்பையை கொட்டி செல்கின்றனர்.அதனால், மழை நீரில் குப்பை நனைந்து, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், அந்த குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, கையால் குப்பையை அள்ளுகின்றனர்.துாய்மை பணியாளர்கள்கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பாக குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.