உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு - மாமல்லபுரம் தடத்தில் புதிதாக அரசு பேருந்து இயக்கம்

செங்கல்பட்டு - மாமல்லபுரம் தடத்தில் புதிதாக அரசு பேருந்து இயக்கம்

மாமல்லபுரம் : தமிழகத்தின் வடமாவட்டங்களில், விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு தந்தை பெரியார் மற்றும் வேலுாரை தலைமையிடமாக கொண்டு, பட்டுக்கோட்டை அழகிரி ஆகிய போக்குவரத்துக் கழகங்கள் முன்பு இயங்கின.இந்த போக்குவரத்து கழகங்கள் மாமல்லபுரம் சுற்றுலா சிறப்பு கருதி, இங்கிருந்து பல வழித்தடங்களில், பழைய பேருந்துகளை தவிர்த்து, புதிய பேருந்துகளை இயக்கி வந்தன.அனைத்து போக்குவரத்துக் கழகங்கள், கடந்த 1996ல் அரசு போக்குவரத்துக் கழகமாக பெயர் மாற்றப்பட்டன. நாளடைவில், கல்பாக்கம் - சென்னை, செங்கல்பட்டு - மாமல்லபுரம் உள்ளிட்ட தடங்களில், வேறு வழித்தடங்களில் இயக்கிய பாழடைந்த பஸ்களே இயக்கப்பட்டன.சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், திருப்பதி, வந்தவாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன.தற்போது, செங்கல்பட்டு - மாமல்லபுரம், ஒரே வழித்தடத்தில் மட்டுமே, தடம் எண்: 508 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக, மிகவும் பாழடைந்த பழைய பேருந்துகளே இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லை.அதன்பின், நீண்ட காலத்திற்கு பின், தற்போது ஒரேயொரு புதிய பேருந்து இயக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணம் இல்லை. இதை பயணியர் வரவேற்றுஉள்ளனர்.இதை தொடர்ந்து, புதிய பேருந்தை வேறு வழித்தடத்திற்கு மாற்ற கூடாது. இந்த தடத்தில் இயக்கப்படும் பழைய பேருந்தை நிறுத்திவிட்டு, அதே வழித்தடத்தில் புதிய பேருந்தை இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை