உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரி - அரசு பஸ் மோதல் உயிர் தப்பிய பயணியர்

லாரி - அரசு பஸ் மோதல் உயிர் தப்பிய பயணியர்

செங்கல்பட்டு,:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இருந்து நெல்வாய் கூட்டுச்சாலை வழியாக, செங்கல்பட்டிற்கு தடம் எண்: 68 என்ற அரசு பேருந்து, நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. இதில், 20 பேர் பயணம் செய்தனர்.செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையில் வந்து கொண்டிருந்த போது, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே, பேருந்துக்கு முன் சென்ற லாரி மீது மோதியது. இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த பயணியர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை