உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊராட்சி எல்லையால் குளறுபடி 100 நாள் பணி பெறுவதில் சிக்கல்

ஊராட்சி எல்லையால் குளறுபடி 100 நாள் பணி பெறுவதில் சிக்கல்

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், கூடலுார் ஊராட்சிக்குட்பட்ட கழனிப்பாக்கம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இதில், கழனிப்பாக்கம் கிராமம், கூடலுார் சாலை, மாரியம்மன் கோவில் தெருவில், 10 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில், 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, 100 நாள் வேலைக்கான பணியாளர் அட்டை உள்ளது.ஆனால், இப்பகுதி மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள எல்லைப் பகுதி, மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டு உள்ளது.எனவே, மொறப்பாக்கம் ஊராட்சியில், 100 நாள் வேலை செய்ய வேண்டும் என, கூடலுார் ஊராட்சி தலைவர் கூறியதால், அப்பகுதிவாசிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதி குடியிருப்புவாசி தா.முனியம்மாள், 37,- கூறியதாவது:கழனிப்பாக்கம் கிராமம், கூடலுார் சாலை, மாரியம்மன் கோவில் தெருவில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்கள் அனைத்தும், கூடலுார் ஊராட்சியில் உள்ளது.கடந்த 2005 முதல் 2023 வரை, கழனிப்பாக்கத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறோம். ஆனால், தற்போது எங்களின் குடியிருப்பு பகுதி மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது.ஆதலால், கூடலுார் ஊராட்சியில், 100 நாள் வேலை செய்ய அனுமதி இல்லை என, ஊராட்சி தலைவர் தெரிவித்து வருகிறார்.இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆகையால், அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள கூடலுார் ஊராட்சியிலேயே, 100 நாள் வேலை வழங்க, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை