உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்ச்சுகளில் பணிபுரிவோருக்கு நல வாரிய உறுப்பினர் பதிவு

சர்ச்சுகளில் பணிபுரிவோருக்கு நல வாரிய உறுப்பினர் பதிவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட சர்ச்சுகளில் பணிபுரியும் ஊழியர்கள், நல வாரிய உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழகத்தில், சர்ச்சுகளில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு, நல வாரியம் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கான விண்ணப்பத்தை, செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இருந்து பெறலாம்.இந்த விண்ணப்பத்துடன், பணிபுரியும் சர்ச் நிர்வாகி அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, இணைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்