| ADDED : மார் 21, 2024 10:49 AM
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.வேம்பனுார், ஆலம்பரைகுப்பம், விளம்பூர் போன்ற, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இது செயல்படுகிறது.இங்கு, 30,000த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், பொது மருத்துவம், மகப்பேறு, தடுப்பூசி, நோய்த்தடுப்பு என, பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்ட காலத்தில், பிரதான சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்த கட்டடம், தற்போது சேமிப்பு அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கட்டடம், தற்போது முறையான பராமரிப்பு இன்றி, மேல் தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.