உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரவு நேர மின்வெட்டால் கூடுவாஞ்சேரி வாசிகள் அவதி

இரவு நேர மின்வெட்டால் கூடுவாஞ்சேரி வாசிகள் அவதி

கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் ஊரப்பாக்கம், பெருமாட்டுநல்லுார், வண்டலுார், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளிலும், சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.மழை பெய்ய துவங்கியதும், இப்பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பகுதிமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து, பெருமாட்டு நல்லுார் பகுதிவாசிகள் கூறியதாவது:கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை பெய்ய துவங்கியதும், மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.அதன்பின், பல மணிநேரம் கழித்து மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணியர் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.எனவே, நந்திவரம் - கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ