உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம்; இந்தாண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்

சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம்; இந்தாண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், ரயில்வே கடவுப்பாதையை கடந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன.கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மேம்பால பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன.மீண்டும், 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், 138.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2021 நவம்பர் மாதம் அமைச்சர் வேலு தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இடையிடையே பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, பாலத்தின் துாண் அமைக்கும் இடத்தில் பழைய கிணறு இருந்ததால், அதற்கான மாற்று திட்டத்திற்கு அனுமதி பெறுவதில், சில மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. தற்போது, 70 சதவீத மேம்பால பணிகள் முடிந்த நிலையில், தொடர்ந்து பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இந்நிலையில், தமிழக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக பொறுப்பு ஏற்றுள்ள பழனிவேல், நேற்று மேம்பால கட்டுமான பணிகளை நேரடியாக பார்வையிட்டார்.மேம்பால கட்டுமான பணிகளின் விபரங்கள் குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பணிகளை தொடர்ந்து நடத்தி, அக்டோபர் மாதத்தில் முதற்கட்டமாக தாம்பரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செல்லும் வகையில் பணிகளை முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மேம்பால பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மின் கம்பங்கள், பூமிக்கு அடியில் செல்லும் பாலாறு குடிநீர் குழாய் இணைப்புகளை மாற்றியமைப்பதில், தாமதம் ஏற்பட்டு வந்தது.தற்போது, அதற்கான அனுமதி கிடைத்து, 24 மணி நேரமும் பணிகள் நடந்து வருகின்றன.அக்டோபர் முதல் வாரத்தில், தாம்பரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செல்லும் வகையில், ஒரு பக்கம் மட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. தொடர்ந்து, டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில், மேம்பாலத்தின் அனைத்து பணிகளும் நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை