உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல்லிக்குப்பம் சாலையில் வடிகால்வாய் பணி வேகம்

நெல்லிக்குப்பம் சாலையில் வடிகால்வாய் பணி வேகம்

கூடுவாஞ்சேரி, நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையிலிருந்து பெருமாட்டுநல்லுார்கூட்டுச்சாலை மற்றும்தங்கப்பாபுரம் வரை, மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு, சில மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, நெடுஞ்சாலைத் துறையினர் மழைநீர் வடிகால்வாயை சீரமைக்கும் பணியில், நேற்று முதல் ஈடுபட்டனர்.இது குறித்து, நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மழைக்காலம் துவங்க இருப்பதால், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் சீராக செல்வதற்கு, மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. சில நிர்வாக காரணங்களால்,பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.தற்போது, அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு, மீண்டும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ