| ADDED : ஜூலை 05, 2024 12:37 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,விரிவாக்கப் பணி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் எம்.எல். ஏ., அலுவலகம் ஆகியவற்றுக்கு, அய்யனார் கோவில் சந்திப்பு கடந்து, பெரும்பாக்கம் வழியாக உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையை, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையின் எதிர் திசையில் பயணித்து, மதுராந்தகம் டவுன் பகுதி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலையையொட்டி சாலையை விரிவாக்கம் செய்ய,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை பணி மேற்கொள்ளப்பட்டுவந்தது.தற்போது, இரண்டு ஆண்டுகளைக் கடந்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணி, முடிவு பெறாமல் ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையிலேயே இருந்தது.இது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து, சில நாட்களாக, ஜல்லிக்கற்கள் சமன் செய்யும் வேலையும், சாலையின் மையத் தடுப்புகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை பணி மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.