உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று உலக பாரம்பரிய நாள் மாமல்லையில் இலவச அனுமதி

இன்று உலக பாரம்பரிய நாள் மாமல்லையில் இலவச அனுமதி

மாமல்லபுரம்:ஒவ்வொரு நாட்டின், பண்டைய கலை, கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை, அதன் பழங்கால நினைவுச் சின்னங்களே, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உணர்த்துகின்றன.அவற்றை பாதுகாத்து, வருங்கால தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி, உலக பாரம்பரிய நாள் எனவும், நவ., 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை, உலக பாரம்பரிய வாரம் எனவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.உலக பாரம்பரிய நாளை முன்னிட்டு, இன்று மட்டும், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கடற்கரை கோவில் வளாகத்தில், மாலை 4:30 மணிக்கு இந்தியன் டிரடிஷனல் ஆர்ட்ஸ் அன்ட் கல்ச்சுரல் அசோசியேஷன், மணிமேகலை இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட்ஸ் குழுவினர் நாட்டிய கலைகள் நிகழ்த்தப்படுவதாகவும், தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி