உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், கிராம நிர்வாக வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த அரிபாஸ்கர்ராவ் என்பவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த பாஸ்கரன், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம நிர்வாக வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டு உள்ளார்.நிர்வாக காரணங்களால், இந்த பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை