உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற இருவர் கைது

சிங்கபெருமாள் கோவிலில் கஞ்சா விற்ற இருவர் கைது

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு பகுதியில், பாலுார் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அதனால், இருவரையும் போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள், 1.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை செய்தனர்.அதில், இருவரும் தெள்ளிமேடு பகுதியை சேர்ந்த மாதவன், 23, சென்னை, எண்ணுார் பகுதியை சேர்ந்த பிரான் வினோத், 28, என்பதும் தெரிந்தது.அவர்கள் இருவரும், தெள்ளிமேடு, கொளத்துார், வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சீமைகருவேலமர புதர்களில் பதுங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை