உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் பாதியை காணோம்; அதிகாரிகள் துாக்கம் கலையுமா?

சாலையில் பாதியை காணோம்; அதிகாரிகள் துாக்கம் கலையுமா?

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டில் இருந்து ஆனந்தபுரம், ஆமையாம்பட்டு வழியாக அருங்குன்றம் வரை செல்லும் 5 கி.மீ., துார சாலை வழியாக, சுற்றுவட்டார கிராம மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், குன்னப்பட்டில் 10க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஒப்பந்தம் அடிப்படையில், ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், சில இடங்களில் மேடு, பள்ளமாகவும், சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ளது.இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ