உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எல்லையம்மன் கோவில் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமையுமா?

எல்லையம்மன் கோவில் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமையுமா?

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேருராட்சி, ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், எல்லையம்மன் கோவில் உள்ளது. இது, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தத்தில் ஒன்றாக உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தை, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.முதலியார்குப்பம், நயினார்குப்பம், ஓதியூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய நலக்கூடம் வசதி இல்லாததால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்பங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை நடத்த, மண்டபம் தேடி கடப்பாக்கம், செய்யூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.மண்டபத்தில் அதிகப்படியான பணம் கேட்பதால், ஏழை, எளிய மக்கள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பொது மக்களின் நலன் கருதி, எல்லையம்மன் கோவில் பகுதியில் சமுதாயநலக்கூடம் அமைத்து, அதன் வாயிலாக பேருராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை