உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சாவுடன் 6 பேர் கைது இருவர் தப்பியோட்டம்

கஞ்சாவுடன் 6 பேர் கைது இருவர் தப்பியோட்டம்

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அடுத்த அடையாளச்சேரி பகுதியில், மர்ம நபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக, அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற அணைக்கட்டு போலீசார், அடையாளச்சேரி ஏரிக்கரை பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கூவத்துார் பகுதியை சேர்ந்த சித்தார்த்தன், 27, அடையாளச்சேரி பகுதியை சேர்ந்த காந்த், 29, குணா, 24, மற்றும் சரத்குமார், 27, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.அடையாளச்சேரி பொங்கமேடு பகுதியில் இருந்த நான்கு இளைஞர்களை மடக்கி விசாரணை செய்ய முயற்சி செய்தபோது, இருவர் தப்பியோடினர்.இருவரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அடையாளச்சேரி பகுதியை சேர்ந்த அன்பரசு, 25, மற்றும் வாலோடை கிராமத்தை சேர்ந்த சக்திவேல், 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.இதையடுத்து, அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து, ஆறு பேரையும் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.மேலும், தப்பியோடிய கூவத்துார் பகுதியை சேர்ந்த கதிர் மற்றும் தென்பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை