உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏர்போர்ட்டில் ரோந்து வாகன திட்டம்

ஏர்போர்ட்டில் ரோந்து வாகன திட்டம்

சென்னை:சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணியர் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, விமான நிலைய காவல் ரோந்து வாகன திட்டத்தை, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட், நேற்று துவக்கி வைத்தார்.அப்போது, கமிஷனர் கூறியதாவது:விமான நிலையத்திற்கு வரும் பயணியர், உடன் வருவோரின் உடைமைகளை பாதுகாக்கும் விதமாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில், 10 பயிற்சி பெற்ற காவலர்கள் உள்ளனர். 2 பிரத்யேக ரோந்து வாகனம், 1 பேட்டரி வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.முதியோர், வெளிநாட்டினருக்கு தேவைப்படும் விபரங்களை வழங்கவும், உதவிகள் செய்யவும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர். இதனால், குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்படுவதுடன், பயணியரின் உடைமைகள் பாதுகாக்கப்படும்.மேலும், புதிதாக வரும் பயணியருக்கு டாக்சி வாகன உதவி, அவசர உதவி குறித்து தெரிவிக்கப்படும். இதனால், மோசடி நபர்களிடம் இருந்து பயணியர் பாதுகாக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி