உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புதிய திட்டம் செயல்படுத்த முடிவு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புதிய திட்டம் செயல்படுத்த முடிவு

சென்னை:முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, புறநகர் பகுதி அறநிலையத்துறை கோவில்கள் பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.பின், அமைச்சர் கூறியதாவது:இந்த ஆட்சியில் கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு 37.13 கோடி ரூபாயில் 92 பணிகளும், கல்லுாரிகளுக்கு 41.53 கோடி ரூபாயில், 34 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 28 பணிகள் முடிவுற்றுள்ளன.கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதல் நாள் 10,000த்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி உள்ளனர்.அங்கு, 360 அரசு விரைவுப் பேருந்துகள், 1,110 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், 840 ஆம்னி பேருந்துகள் என, 2,310 பேருந்துகள் தினமும் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்லும் 30 சதவீத பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். பின், கோயம்பேடு பேருந்து நிலையம், அதையொட்டி சி.எம்.டி.ஏ.,விற்கு உள்ள, 16 ஏக்கர் இடத்தையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், கூடுதல் கமிஷனர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை