உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தனியார் கல்லுாரியில் கல்விக்கடன் முகாம்

 தனியார் கல்லுாரியில் கல்விக்கடன் முகாம்

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் தனியார் கல்லுாரியில், வரும் 25ம் தேதி, கல்வி கடன் முகாம் நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு, கிராமப்புற வங்கிகள் இணைந்து, கேளம்பாக்கம் பகுதியில் உள்ள பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், மாபெரும் கல்வி கடன் முகாம், வரும் 25ம் தேதி நடக்கிறது. இம்முகாமில், கல்விக்கடன் தேவைப்படும், மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மாவட்டத்தில் படித்து வரும் மாணவ - மாணவியர் பங்கேற்று, பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை