மேலும் செய்திகள்
சிதிலமடைந்த கழிப்பறை கீழக்கரணையில் அவதி
3 hour(s) ago
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
3 hour(s) ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பல்லவர் சிற்பங்களை, தமிழக கவர்னர் ரவி கண்டு ரசித்தார். தமிழக கவர்னர் ரவி, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல்லவர் கால பாறை சிற்பங்களை, குடும்பத்தினருடன் அவ்வப்போது கண்டு ரசிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை 4:00 மணியளவில், குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வந்தார். கடற்கரை கோவில் பகுதியில், மாவட்ட கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு பொறுப்பு போலீஸ் எஸ்.பி., சண்முகம் ஆகியோர், அவரை வரவேற்றனர். அப்போது கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு ஆகிய சிற்பங்களை கண்டு ரசித்து, 5:00 மணிக்கு சென்னை புறப்பட்டார். தொல்லியல் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் உடனிருந்தார். நகராட்சி நிர்வாகம் சாலை பகுதிகளை முறையாக பராமரிக்காத நிலையில், நேற்று கவர்னர் வருகையை ஒட்டி, அவசரமாக குப்பையை அகற்றி துாய்மைப்படுத்தியது.
3 hour(s) ago
3 hour(s) ago