உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் மண் குவியலால் விபத்து அபாயம்

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் மண் குவியலால் விபத்து அபாயம்

கூடுவாஞ்சேரி:வண்டலுார் மேம்பாலத்தில் இருந்து, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், மண் குவியல்களாக சேர்ந்துள்ளன.அது மட்டுமின்றி, சாலையில் ஏற்பட்டுள்ள அதிக பள்ளங்களால், வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறங்களிலும், ஆங்காங்கே பள்ளங்களும், அதிக அளவில் மண் திட்டுகளும் காணப்படுகின்றன.மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் வரை, அதிக அளவிலான மண் திட்டுகள் சேர்ந்துள்ளன.இருசக்கர வாகனங்களில் செல்வோர், அதில் நிலை தடுமாறி செல்கின்றனர். அதனால், சாலையில் ஏற்பட்டுள்ள மண் குவியல்களையும், பள்ளங்களையும் சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ