உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏ.டி.எம்., எச்சரிக்கை மணி வடத்தை அறுத்தவர் கைது

ஏ.டி.எம்., எச்சரிக்கை மணி வடத்தை அறுத்தவர் கைது

அனகாபுத்துார்:பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், அனகாபுத்துார் காமராஜர் தெருவில், கனரா வங்கி ஏ.டி.எம்., உள்ளது.இந்த மையத்தில், மர்ம நபர் ஒருவர் புகுந்து, எச்சரிக்கை மணி வடத்தை அறுத்து உள்ளார்.இதையறிந்த வங்கி அதிகாரிகள், உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து, மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில் அவர், அனகாபுத்துாரைச் சேர்ந்த பூபதி, 23, என்பதும், பெயின்டரான அவர் போதையில் இருந்ததும் தெரிந்தது.இதையடுத்து பூபதியை கைது செய்த சங்கர் நகர் போலீசார், நேற்று மாலை சிறையில் அடைத்தனர். பூபதி மீது பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை