மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
3 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
7 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
7 hour(s) ago
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த கடுகுப்பட்டு கிராமத்தில் உள்ள வீராணம் ஓடை அருகே, நாராயணன் என்பவர் தன் இடத்தை சீரமைத்தபோது, மனித எலும்புக் கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்ததில், 80 வயது மதிக்கத்தக்க ஆணின் எலும்புக் கூடு என தெரிய வந்தது.இதையடுத்து, எலும்புக் கூடை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடுகுப்பட்டைச் சேர்ந்த துரைசாமி, 80, என்பவர், கடந்த ஜூலை மாதம் காணாமல் போனார்.இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஓடை அருகே கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடு துரைசாமியின் எலும்புக் கூடாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago