உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சொத்து வரி செலுத்துவதற்கு கூடுவாஞ்சேரியில் சிறப்பு முகாம்

சொத்து வரி செலுத்துவதற்கு கூடுவாஞ்சேரியில் சிறப்பு முகாம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், சொத்து வரி செலுத்துவதற்கு, இன்று ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என, நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறியதாவது:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி முதலாவது, இரண்டாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்களது வீட்டு வரி மற்றும் சொத்து வரியை கட்ட, இன்று ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.கூடுவாஞ்சேரி அருள் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை வரை, இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, இதுவரை வரி செலுத்தாதோர் பங்கேற்று, சொத்து வரியை செலுத்தி, அபராதம் விதிப்பதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை